சட்டத்தின் மூலங்கள்
சட்டம் எழுத வேண்டும் என்றால் அதற்கு ஆதாரமாக இருப்பவை எவை என்று உங்களுக்கு தெரியுமா ? அவை முறையே வழக்குமுறை , அரசமைப்பு,இயற்றுமுறை , முன் தீர்ப்பு நெறி , , சட்டவல்லுநர் நூல்கள் என்பன . இவைகளை நாம் சட்டத்தின் மூலங்கள் என்கின்றோம் .
பழங்காலத்தில் மக்களின்பழக்க வழக்கங்களாக இருந்தவை , பொது நியதிகளாக மாறி காலப்போக்கில் விதிகளாக உருப்பெற்று தவிர்க்க முடியாது எனும்போது சட்டமாகிறது. இதை வழக்குமுறைச்சட்டம் என்கின்றனர் , (உ - தா ) இந்து சட்டம் , பன்னாட்டு சட்டம்
முன் தீர்ப்பு நெறி ;
நீதி மன்றத்தில் ஒரு வழக்கிற்காக அளிக்கப்படும் தீர்ப்பானது அடுத்து வரக்கூடிய வழக்குகளுக்கு வழிகாட்டிய இருக்கும் . எனவே இவை சட்டங்களாகவும் ,வரக்கூடிய புதிய சட்டங்களுக்கு மூலமாகவும் விளங்கும்
அரசமைப்பு ;
இறைமையும் , சுதந்திரமும் கொண்ட ஒரு நாடு தான் எவ்வாறு இயங்க வேண்டும் என தானே எல்லா நெறிமுறைகளையும் வகுத்துக்கொண்டு வரையறை செய்து உருவாக்கப்படும் சட்டம் அரசமைப்புச்சட்டம் . இதன் அடிப்படையில்தான் எல்லா நிகழ்வுகளும் அந்நாட்டில் இயங்கும் என உணரலாம்
இயற்றுமுறை ;
சட்டம் இயற்றுவது என்பது அரசின் சிறப்புரிமை ஆகும் . தம் நாட்டின் இரையன்மைக்குட்பட்டு தகுதியும் ,திறமையும் பெற்றவர்களால் இயற்றப்படும் சட்டங்கள் இயற்றுமுறை சட்டங்கள் எனப்படும்
ஆ. கார்திக்கேயன்
Wednesday, March 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment